வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை, வரும் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். உலக அமைதிக்கான மிக முக்கியமான தருணமாக, அந்த சந்திப்பை மாற்ற நாங்கள் முயற்சிப்போம் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.