இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் மோகன்லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சூர்யா - கே.வி.ஆனந்த் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணிக்கு இது மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.