அரை கும்பமேளா விழா அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 14-ம் நாள் மகர சங்கராந்தி தொடங்கி மார்ச் மாதம் 4-ம் நாள் மகாசிவராத்திரி வரை, 50 நாள்கள் நடைபெறும் என அலகாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக 2,500 கோடி ரூபாய் மத்திய - மாநில அரசுகள் ஒதுக்கி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது என்றும் அறிவித்துள்ளது.