தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வானத் தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தேரை வடம் பிடித்து இழுத்துத் தேரோட்டத்தை துவக்கிவைத்தார்.  இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.