சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் சார்பாக 1000 ரசிகர்கள் சிறப்பு ரயில் மூலமாக புனே நகருக்கு நேற்று புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் 13-ம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிராக  நடைபெற உள்ள போட்டியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில், மாலையில் எங்குத் திரும்பினாலும் மஞ்சள் நிறமாகவே காட்சியளித்தது.