பஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது. சுனில் நரேன் 75 ரன்களும், தினேஷ் கார்த்திக் 50 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் தரப்பில் ஆண்ட்ரூ டை 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.