ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் அக்னி நட்சத்திர விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மேள, தாளம் முழங்க தீர்த்தக் குடங்களுடன் 14 கி.மீ தூரம் மலையைச் சுற்றி கிரிவலம் வந்தனர்.