மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. இரு அணிகளுமே தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால், இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகப் பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் வென்றால் மும்பை அணி 3-வது இடத்துக்கு முன்னேறும்.