ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் தொடர்ந்து 5 அரை சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜாஸ் பட்லர். இதன் மூலம் 2012ம் ஆண்டு டெல்லி அணியில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சேவாக் செய்த சாதனையை சமன் செய்துள்ளார்.