காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் திருவிழா கடந்த 8-ம் தேதி காப்புகட்டுதல் மற்றும் சிம்ம வாகனத்தில் உலாவுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் காமதேனு, அண்ணம், கைலாசம், ஆகிய வாகனங்களில் நடைபெற்ற உலா நாளை குதிரை வாகனத்தில் முடிவடைய உள்ளது. இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.