சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாகத் தொடரும். தமிழ் மொழிக்கு ஆதரவு அளிப்பதில் சிங்கப்பூர் அரசு தெளிவாக உள்ளது. ஆனால், இதைச் செயல்படுத்துவது தமிழர்கள், குறிப்பாகத் தமிழ் இளைஞர்கள் கையில்தான் உள்ளது. தமிழை அவர்கள் தங்கள் வாழ்வின் அங்கமாகக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.