ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெங்களூர் அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பஞ்சாப் தரப்பில் 3 வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை.