அருவி படம் மூலம் அனைவரின் கவத்தையும் பெற்றவர் அதிதி பாலன். அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் 150க்கும் மேற்பட்ட கதைகளை கேட்டவர், அனைத்தையும் நிராகரித்துள்ளார். இன்னும் 2 ஆண்டுகள் ஆனாலும் சரி. பிடித்த கதை வரும் வரை காத்திருப்பேன் என உறுதியாக இருக்கிறார் அதிதி.