காரைக்குடியில் மிகவும் புகழ்பெற்ற கொப்புடைய நாயகி அம்மன் கோயில் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை (8.5.2018) தொடங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று இறுதியாகப் பல்வேறு இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள் என முக்கிய பிரமுகர்களின் வருகையுடன் தேரோட்ட திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்று நிறைவுற்றது.