ஏற்காடு கோடை விழாவை முன்னிட்டு நேற்று நாய் கண்காட்சி நடைபெற்றது. இதில் 60-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான நாய்கள் தங்கள் உரிமையாளர்களோடு கலந்துகொண்டது. இதில் ஏற்காடு செம்மநத்தம் பகுதியைச் சேர்ந்த மேகநாடு எஸ்டேட்டின் உரிமையாளர் மோகன் ராஜேஸுக்குச் சொந்தமான அத்தி முதல் பரிசை பெற்று அசத்தியது.