கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஐ.பி.எல் போட்டியில் கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது. 187 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது. மும்பை பட்டியலில் 4 வது இடத்துக்கு முன்னேறியது.