பஷிரியா என்ற பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டபோது குழந்தை உடல் முழுவதும் காயங்களுடனும் உயிரிழந்த நிலையில் பிறந்தது. அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் பச்சிளங்குழந்தை உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டி,  திருச்சி அரசு மருத்துவமனையை அவரின் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.