கர்நாடக முதல்வராகப் பா.ஜ.க-வின் எடியூரப்பா பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள மனு இரவே விசாரிக்கப்படுகிறது. இதையடுத்து ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன், பாட்டே ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நள்ளிரவில் விசாரணை நடத்துகிறது. விசாரணை முடிவில் எடியூரப்பா பதவியேற்பு நடைபெறுமா எனத் தெரிய வரும்.