இஸ்லாமிய மாதங்களில் 9 வது மாதமான ரமலான் மாதத்தின் ஓர் இரவில்தான் புனித நூலான குர்ஆன் வசனங்கள் இறங்கப்பட்டதாக நம்பிக்கை உண்டு. அந்த மாதம் நோன்பு மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வருட ரமலானை முன்னிட்டு பெரும்பாலான இடங்களில் பிறை தெரிந்ததை அடுத்து இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கும் எனத் தலைமை காஜி அறிவித்துள்ளார்.