கர்நாடக மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்பதற்கு எடியூரப்பாவுக்கு அம்மாநில ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார். இன்று 9 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஆளுநர் மாளிகையைச் சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.