கேரளாவில் இடுக்கி பகுதியில், ஊருக்குள் புகுந்த அழகான குட்டியானையுடன் மக்கள் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.  சிலர் அதற்கு பால், பழம் என உணவு வகைகளை அன்புடன்  கொடுத்தனர். தாயை விட்டுப் பிரிந்த ஏக்கத்தினால் குட்டி எதையும் ஏற்க மறுத்துவிட்டது.  வனத்துறையினர் அதை மீட்டு தாயுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.