பள்ளிப் பருவத்தில் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பாதுகாத்து வருபவர்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதேபோல், ஐஸ்வர்யா ராய் தனது பள்ளிப் பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். புகைப்படம் வெளியான நொடி முதல், அவரைக் கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கிவிட்டனர் ரசிகர்கள்.