2 தசாப்தங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருந்த ரத்தன் டாடாவின் கனவு வாகனமாக இண்டிகாவின் விற்பனை இப்போது முடிந்துவிட்டது. என்றாலும் இந்தக் கார்களுக்கான சர்வீஸ் தொடர்ந்து வழங்கப்படும் என்று டாடா நிறுவனத்தினர் கூறியுள்ளனர். மாற்றமடைந்து வரும் கார் சந்தை மற்றும் டாடாவின் டிசைனை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்கள்.