சமீபத்திய சரிவுகளுக்குப் பின் இந்திய பங்குச் சந்தையில் இன்று முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஓரளவு ஆர்வம் காட்டியதால், சென்செக்ஸும் நிஃப்ட்டியும் நல்ல லாபங்களுடன் முடிவடைந்தன. ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் பெரிதான எந்த உற்சாகமான போக்கு இல்லாது போயினும், இந்திய பங்குச் சந்தையில் இன்று நல்ல முன்னேற்றம் இருந்தது.