திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் இன்று காலை 5 மணிக்கு வெகுவிமரிசையாக நடந்தது.  பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆருரா, தியாகேசா என்று விண்ணதிரும் பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்தனர். ஆழித்தேர் அலங்கார தொம்பைத்துணி அசைந்தாட வந்ததைக் கண்டு, பக்தர்கள் மெய்சிலிர்க்கத் தரிசனம் செய்தனர்.