திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தென் மாவட்டத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் மாலை அணிந்தும் விரதமிருந்தும் பாதயாத்திரையாகத் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.