சுஸூகி ஜிக்ஸர் பைக்கின் புதிய வேரியன்ட் வெளியாகியுள்ளது. இதுவரை ஃபேரிங் வைத்த ஜிக்ஸர்  SF பைக்குகளில் மட்டுமே இருந்த ஏபிஎஸ் இப்போது ஜிக்ஸரிலும் வந்துவிட்டது. ட்வின் டிஸ்க் வேரியன்டை விட 8,000 ரூபாய் கூடுதலாக, ரூ.1.02 லட்சம் எனும் சென்னை ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு வந்துள்ளது இந்த வேரியன்ட்.