108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கருட சேவை, இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பெருமாளை வழிபடுவதற்கு வழியெங்கும் பக்தர்கள் கூட்டம் நிரம்பிவழிந்தது. வரதர் உற்சவத்தால், காஞ்சி நகரே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.