ரயில்களில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் உறுதியாகக் கிடைக்குமா என்பதை உடனுக்குடனே தெரிந்து கொள்ளலாம். இதற்கான புதிய வசதியை ரயில்வே அமைச்சகம் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் அறிமுகம் செய்துள்ளது. டிக்கெட்டுகள் உறுதியாகும் வாய்ப்பைக் கணித்துக்கொள்ளவும் முன்பதிவு முறையில் சில சலுகைகளையும் ரயிவே துறை வழங்கியுள்ளது.