இமயமலையின் மானசரோவர் ஏரியில் இந்திய பக்தர்கள் புனித நீராட சீன அரசு அனுமதி அளித்தது. முன்னதாக, இந்திய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வெளியுறவுத் துறையின் தலையீட்டால் தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக, அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்குப் பக்தர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.