முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதுண்டு. வைகாசி விசாகத் திருவிழாவில் பல்வேறு நேர்த்திக் கடன்களைச் செலுத்திய பக்தர்கள், கடல் மீன் சாப்பிட்டு தங்கள் விரதத்தை முடித்துக் கொண்டனர்.