அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால் தங்களிடமுள்ள பழைய தங்க நகைகளை மக்கள் விற்று ரொக்கமாக மாற்றி வருகின்றனர். இந்த மே மாதத்தில் மட்டும் பழைய தங்க நகைகளின் வரத்து 10-15 சதவிகிதம் வரையில் அதிகரித்துள்ளதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.