பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், வாட்ஸ்அப்-க்குப் போட்டியாக கிம்போ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. பாதுகாப்புக் காரணங்களைக் கூறி இந்தச் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம்,  ஆப்பிள் ஐ ஸ்டோரில் இந்த ஆப் இருப்பதாகக் கூறப்படுகிறது.