வாட்ஸ்அப் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்களுக்கு போட்டியாக, நேற்று கிம்போ ஆப்பை வெளியிட்டது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம். பின்னர், அந்த ஆப் ப்ளே ஸ்டோரிலிருந்து காணாமல் போனது. இது தொடர்பாக அந்நிறுவனம், ‘இது கிம்போவின் ட்ரெயல் வெர்ஷன் மட்டும்தான். அதிகாரபூர்வ வெளியீடு கிடையாது’ என விளக்கம் அளித்துள்ளது.