ஐ.பி.எல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை மும்பை காவல்துறையினர் மே-15 தேதி கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சூதாட்டத்தில் சல்மான் கான் சகோதரரும் நடிகருமான அர்பாஸ் கானுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இன்று அர்பாஸ்கானிடம் விசாரணை நடத்தியதில், அவர் பந்தயத்தில் ஈடுபட்டது உறுதியானது.