ஜெர்மனியைச் சேர்ந்த Freudenberg நிறுவனம், 169 ஆண்டுகள் பழைமையானது. இந்தியாவில் கடந்த 90 ஆண்டுகளாக வாகனங்களுக்கான உதிரிபாகங்களைத் தயாரித்துவருகிறது. தற்போது, இந்த நிறுவனம் சென்னையில் உள்ள வல்லம் வடகலில், தனது புதிய தொழிற்சாலையை நிறுவவுள்ளது. இதற்காக 213 கோடியை முதலீடு செய்கிறது. 2019-ம் ஆண்டு செயல்பாட்டுக்குவரும்.