கர்நாடகாவில் காலா வெளியாகுமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தநிலையில், பெங்களூருவில் உள்ள மந்த்ரி மாலில் காலா டிக்கெட் விநியோகம் தொடங்கியது. மேலும் மந்த்ரி மால் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்து  அப்புறப்படுத்தினர். இதையடுத்து மந்த்ரிமாலில் காலா திரைப்படம் வெளியானது.