கேம்பிரிட்ஜ் அனாலிடிகா சர்ச்சையிலிருந்து மீண்டு வந்த நிலையில் தற்போது, புதிய சர்ச்சையில் ஃபேஸ்புக் சிக்கியுள்ளது. மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடு காரணமாகச் சுமார் 14 மில்லியன் ஃபேஸ்புக் பயனீட்டாளர்களின், தனியுரிமை சார்ந்த தகவல்கள் அவர்களுக்கே தெரியாமல், பொதுவெளியில் பகிரப்பட்டிருக்கிறது.