`ஃபெட்னா' என அழைக்கப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கமும் மின்னாபோலிஸ் நகர தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 31வது ஆண்டு பேரவைத் தமிழ் திருவிழா வரும் ஜூன் 29-ம் தேதி பிரிஸ்கோ நகரில் தொடங்குகிறது. 3 நாள்கள் நடைபெற உள்ள இந்த விழாவில் 5,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கத் தமிழர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.