உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. அதனால், சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்கள் பறப்பதற்கு ஜூன் 11, 12, 13 ஆகிய மூன்று நாள்களுக்கு அந்நாடு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.