பாகிஸ்தானில் ஜூலை 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானின் நெருங்கிய உறவினர் நூர் ஜெஹான் போட்டியிடுகிறார். அவர், பேஷாவர் என்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். பெண்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.