ஐசிசி சர்வதேச டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் டி20 பந்துவீச்சாளர் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர்(10 -வது இடத்தில் பும்ரா) தான் உள்ளார். முதல் இடத்தில் ரஷித் கான் உள்ளார். பாகிஸ்தானின் ஷதாப் கான், இந்தியாவின் சாஹல் ஆகியோர் 2 மற்றும் 3 -வது இடங்களில் உள்ளனர்.