வாட்ஸ் அப் மூலம் நாள்தோறும் போலி செய்திகள், தவறான விளம்பரங்கள் என அதிகளவில் பரிமாறப்பட்டு வருகிறது. இந்த பிரச்னைகளை சமாளிக்க, வாட்ஸ் அப் ஃபார்வர்டு எனும் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஒருவர் ஒரு மெச்சேஜை ஃபார்வார்டு செய்யும் போது, அதனை படிப்பவர்களுக்கு ஃபார்வர்டெட்(FORWARDED) என தெரிவிக்கப்படும்.