மலேசியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான ஆசிய கோப்பைத் தொடரில் இந்திய பெண்கள் அணி பாகிஸ்தான் பெண்கள் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 72 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், களம் இறங்கிய இந்திய பெண்கள் அணி 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.