உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலைக் கிராமங்களில் வாழும் மக்களுக்கு பலூன் மூலம் இன்டர்நெட் சேவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ரவத் டேராடூனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தொடங்கி வைத்தார். இதற்கு, ரூபாய் 50 லட்சம் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.