இந்தோனேசியா மழைக்காடுகளில் மரங்களை அடியோடு சாய்த்து வரும் புல்டோசர் முன்பு உராங்குட்டான் குரங்கு சண்டையிடும் வீடியோ இணையத்தில் வைரல்.  சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவுசெய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில், தன் இருப்பிடம் தன் கண்முன்னே தரைமட்டமாக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாமல், புல்டோஸருடன் உராங்குட்டான் சண்டையிடுகிறது.