உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க நிதி உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய வீராங்கனை ப்ரியாவுக்கு உ.பி அரசு சார்பில் ரூ 4.50 லட்சம் வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ப்ரியா, `அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டுக்கு கௌரவம் தேடி தருவது எனது கடமை’ என்றார்.