சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் 2 -ம் நாள் அமர்வுக்கு முன்பாக சீன பிரதமர், உறுப்பு நாட்டுத் தலைவர்களை வரவேற்கும்போது இந்திய பிரதமரை சந்தித்தார். மாநாடு முடிந்த பின்னர் பிரதமர் மோடி சீன அதிபர் ஸி ஜின்பிங்கை சந்தித்து இருநாடு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.