இன்டர்காண்டினன்டல் இறுதிப்போட்டியில் நேற்று இந்தியா - கென்யா அணிகள் மோதின. ஆட்டத்தின் 8 மற்றும் 29-வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி கோல்கள் அடித்தார். இதன்மூலம் சர்வதேசப் போட்டிகளில் 64 கோல்கள் அடித்து லயோனல் மெஸ்ஸியின் சாதனையைச் சமன் செய்துள்ளார் சுனில் சேத்ரி. இதையடுத்து, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.