அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், நாளை சிங்கப்பூர் சென்டோசா தீவில் நேரில் சந்தித்துப் பேசுகிறார்கள். இரு நாட்டுத் தலைவர்கள் சந்திக்கும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்காக 101 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக, சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார்.